செட்டிபாளையத்தில் நிலம் அபகரிக்க முயன்ற திமுக கவுன்சிலரின் கணவர் மீது வழக்கு பதிவு

கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள 4.45 ஏக்கர் நிலத்தைப் போலி பத்திரம் மூலம் அபகரிக்க முயன்ற வழக்கில் திமுக கவுன்சிலரின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: போத்தனூர் அருகே நில மோசடிக்கு மூளையாகச் செயல்பட்ட திமுக கவுன்சிலரின் கணவரான ரவிக்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை போத்தனூர் அடுத்த கஞ்சிகோணம்பாளையம் இளங்கோ வீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (37), இவருக்கு செட்டிபாளையம் சாலையில் 4.45 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ.2 கோடி. இந்நிலையில் தனது நிலத்தைச் சிலர் அபகரித்துள்ளதாக செட்டிபாளையம் போலீசில் ராமச்சந்திரன் புகார் அளித்தார்.

மேலும் கிணத்துக்கடவு சார்பதிவாளர் அலுவலகத்தில் தடங்கல் மனு அளித்திருந்தார். போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மலுமிச்சம்பட்டி ஊராட்சி மூன்றாவது வார்டு கவுன்சிலர் சித்ராவின் கணவரும், திமுக கிளைச் செயலாளருமான ரவிக்குமாரின் திட்டப்படி, லட்சுமணன் என்பவர் நிலத்தை அபகரித்தது தெரியவந்தது.

மேலும் லட்சுமணனின் தந்தையின் பெயரும் கிருஷ்ணசாமி என்பதால் இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி பீளமேடு காவல் நிலையத்தில் மேற்குறிப்பிட்ட இடத்தின் பத்திரம் தொலைந்து விட்டதாக லட்சுமணன் புகார் அளித்துள்ளார். மேலும் அங்கிருந்து ஆவணத்தைக் கண்டுபிடிக்க இயலவில்லை எனச் சான்று பெற்று அதனைப் பத்திரப்பதிவு அலுவலகத்தில் கொடுத்து, அங்கிருந்த ராமச்சந்திரனின் பத்திரத்துக்கான நகலைப் பெற்றுள்ளார்.

மேலும் இந்த இடத்தை ரவிக்குமாரின் பெயருக்கு கிரையம் செய்து கொடுத்துள்ளார். இதை அடுத்து காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அடிப்படையில் லட்சுமணனை மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு அழைத்து அங்கு அவரிடம் விசாரணை நடைபெற்றது. பின்னர் லட்சுமணனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் மோசடிக்கு மூளையாக செயல்பட்ட ரவிக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...