கோவையில் இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி

கோவை தனியார் ஓட்டலில் இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் 4 மாநில ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி.


கோவை: பருத்தி விளைச்சல், மற்றும் சந்தையின் போக்கு, தரம் மேம்பாடு போன்ற விஷயங்களில் தகவல் பரிமாற்றங்களைத் தொடர்ச்சியாகப் பகிர்ந்து கொள்வது என இந்தியத் தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கோவையில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில், இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு(ஐடிஎஃப்) சார்பில், ஆந்திரா, தமிழ் நாடு, குஜராத் மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த ஜவுளி உற்பத்தி நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் நடத்தியது.

இதில் 4 மாநிலங்களிலிருந்து 120 நூற்பாலை உரிமையாளர்கள், குறிப்பாக ஆந்திரா ஸ்பின்னிங் மில் அசோசியேஷன், தெலங்கானா ஸ்பின்னிங் மில் அசோசியேஷன், குஜராத் ஸ்பின்னிங் மில் அசோசியேஷன் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ஐ.டி.எப். அமைப்பின் கன்வீனர் பிரபு தாமோதரன், ஆந்திர நூற்பாலைகள் சங்கம் சார்பில் சலபதி ராவ், தெலங்கானா நூற்பாலைகள் சங்கம் சார்பில் ஆர்.கே. அகர்வால், குஜராத் நூற்பாலைகள் சங்கம் சார்பில் ரிப்பில் படேல் மற்றும் ஐ.டி.எப்.அமைப்பின் அரவிந்த் செல்வபதி,சரவண சுதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் விவாதிக்கப்பட்டு, 4 மாநில ஜவுளித் தொழில் முனைவோரின் ஒத்துழைப்புக்கான விஷயங்களாக, கீழ்க்கண்டவை முடிவெடுக்கப்பட்டன.

அதன் விவரம் பின்வருமாறு:

பருத்தி விளைச்சல், மற்றும் சந்தையின் போக்கு, தரம் மேம்பாடு போன்ற விஷயங்களில் தகவல் பரிமாற்றங்களைத் தொடர்ச்சியாகப் பகிர்ந்து கொள்வது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நூல் மற்றும் துணி விற்பனையில் ஏற்படும் மாற்றங்களையும், தேவை சம்பந்தமான மாறுதல்களையும் பகிர்ந்து கொள்வது.

உற்பத்திக்குக்கான அளவுகோல்கள், உற்பத்தி செலவுகளைக் குறைக்கும் முயற்சிகள், தொழில்நுட்ப மேம்பாடு போன்ற விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளக் குழுக்களை அமைப்பது.

நூற்பாலைகளின் அடுத்த கட்ட முயற்சியாக, மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்புக்கு புது முதலீடுகள் செய்வதற்கான அறிவுசார் வழிமுறைகளை ஆராய்வது.

இந்திய மற்றும் ஏற்றுமதி ஜவுளி சந்தையில் ஏற்படும் மாற்றங்களை மாதாந்திர ஆன்லைன் கூட்டங்கள் நடத்துவதன் மூலம், சரியான புரிதலைக் கொண்டு வருவது.

மேலும், இந்த கூட்டத்தில் தற்போதைய ஜவுளித்தொழில் நிலையைப் பற்றியும், ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், போட்டித் திறனை வளர்க்க எடுக்க வேண்டிய முயற்சிகள் பற்றியும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது குறைந்து இருக்கும் பஞ்சு விலை, குறைந்துள்ள சரக்கு போக்குவரத்து கட்டணங்கள், வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் மூன்று மாதங்கள் அதிகமாக இறக்குமதி செய்யாத நிலையில் அவர்களுடைய சரக்கு கையிருப்பு குறைந்துள்ள நிலை, வளர்ந்த நாடுகளில் பணவீக்கம் குறைந்து வருவது, சீனாவின் பொருளாதாரம் முற்றிலுமாக கோவிட்டை எதிர்கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்புதல், போன்ற சாதகமான அம்சங்கள் காரணமாக இந்தாண்டில், ஜவுளி வர்த்தகம் இயல்பு நிலையை நோக்கித் திரும்பும் என்று எதிர்பார்ப்பதாகக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...