கோவையில் நடைபெற்ற கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சமீரன் மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில்.
கோவை: கோவை போத்தனூர் சாலையில் உள்ள தனியார் மண்டப அரங்கில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை எக்கனாமிக் சேம்பர் சார்பாக நான் முதல்வன் எனும் திட்டத்தின் கீழ் 2023ஆம் ஆண்டிற்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி, போத்தனூர் சாலையில் உள்ள வெட்டிங் பேலஸ் மண்டப அரங்கில் நடைபெற்றது.

இதில் தலைமை விருந்தினராக ஜாமியா இல்மியா அறிவியல் மற்றும் அரபிக் ஆராய்ச்சி கல்லூரியின் நிறுவனர் மௌலானா கலீல் அஹ்மத் முனீரி கலந்து கொண்டார்.

10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் எதிர்கால துறையைத் தேர்வு செய்வது எப்படி மற்றும் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள தங்களைத் தயார் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஜி.எஸ். சமீரன் மாணவ, மாணவிகளின் பல்வேறு கேள்விகளுக்கு தம்முடைய அனுபவங்களைப் பகிர்ந்தபடி பதிலளித்துப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ரஹ்மான், மாணவ, மாணவிகளின் எதிர்கால துறைகளைத் தேர்வு செய்வது குறித்த ஆலோசனைகளை வழங்க இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து உள்ளதாகவும், இதில் கலை அறிவியல், மானுடவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டு, மாணவ மாணவிகள் போட்டி தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி என்றும், தலைமைப் பண்பு போன்றவற்றை வளர்த்து சாதனையாளர்களாக வாழ்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்கியதாகத் தெரிவித்தார்.