துடியலூர் அருகே சாலை வாரம் பாதுகாப்பு வார விழிப்புணர்வு பேரணி

கோவை துடியலூர் அருகே சாலைகள் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கம், துடியலூர் காவல் துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகளின் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி.


கோவை: சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகித்து, வாகனங்களின் முகப்பு விளக்கிற்கு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.



கோவை துடியலூர் அருகே சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கம், துடியலூர் காவல் துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகளின் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகித்து, வாகனங்களின் முகப்பு விளக்கிற்கு ஸ்டிக்கர்கள் ஒட்டினர்.



இப்பேரணியை வி.ஜி.மருத்துவமனை மருத்துவர் நந்தினி வெங்கடேஷ், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் மனுநீதி, துடியலூர் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் மணி மற்றும் கோயமுத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் வேணுகோபால் ஆகியோர் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தனர்.



இந்த பேரணியில் கலந்துகொண்டவர்கள் சாலைகளில் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.

பேரணியானது வி.ஜி.மருத்துவமனையில் தொடங்கி விஸ்வநாதபுரம் வழியாக துடியலூர் பேருந்து நிறுத்தத்தை அடைந்து, மீண்டும் மருத்துவமனைக்குச் சென்று முடித்தனர்.

அங்கு நெடுஞ்சாலைத்துறை கோட்டுப்பொறியாளர் மனுநீதி தலைமையில் டூவிலரில் ஹெல்மெட் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும்போது சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இந்த பேரணியில் வி.ஜி.மருத்துவனை மனிதவள மேலாளர் பிரசாந்த், முதல்வர் ருக்குமணி, ஆசிரியர்கள், கோயமுத்தூர் மாவட்ட சாலைகள் பாதுகாப்பு சங்க செயலாளர் தேவேந்திரன், துணைத் தலைவர் தமிழ்செல்வன், துணை செயலாளர் பன்னீர்செல்வம், நிர்வாகிகள் செல்வராஜ், ராஜேஷ், ஜீவா, துரைசாமி, உறுப்பினர்கள் பிரபாகரன், முத்துகுமாரசாமி, முருகதாஸ், சதாசிவம், ஆறுச்சாமி, செந்தில், வேலுசாமி, தர்மலிங்கம், டி.பி.ராஜேந்திரன், மோகன்ராஜ், சுந்தரசாமி மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...