கோவை குனியமுத்தூரில் பேருந்தில் சென்ற ஆசிரியையிடம் செயின் பறிப்பு

கோவை குனியமுத்தூரில் அரசு பேருந்தில் சென்ற ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியை கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயினை மர்ம நபர்கள் திருடிச் சென்றதால் பரபரப்பு.


கோவை: குனியமூத்தூரில் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஆசிரியையிடம் தங்க செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஈச்சனாரி பகுதியைச் சேர்ந்தவர் முத்தமிழ் செல்வி (58). ஓய்வு பெற்ற தனியார் பள்ளி ஆசிரியையான இவர், தற்போது குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல பணிக்குச் சென்ற முத்தமிழ் செல்வி அரசு பேருந்தில் பயணம் செய்தார்.

இந்நிலையில் குனியமுத்தூர் பேருந்து நிலையம் வந்து இறங்கி, கழுத்தைக் கவனித்த போது தனது கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து முத்தமிழ்ச் செல்வி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் வழக்குப் பதிவுச் செய்த போலீசார் செயினை திருடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். கோவை மாநகரில் கடந்த சில தினங்களாகப் பேருந்துகளில் செல்லும் பெண்களைக் குறி வைத்து செயின் திருடும் சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...