வால்பாறை அருகே சத்துணவு மையம், கோவிலை சேதப்படுத்திய காட்டு யானைகள் - பரபரப்பு..!

வால்பாறை அடுத்த உபாசி எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளிக்குள் புகுந்த 4 காட்டு யானைகள், சத்துணவு கூடத்தை உடைத்து சேதப்படுத்திவிட்டு, அருகே இருந்த கோவில் சுவரையும் உடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

குடியிருப்பு பகுதிகளில் நுழையும், காட்டு யானைகள் வீடுகள் மளிகை கடைகள், சத்துணவு மையம் போன்றவற்றை இடித்து வீட்டிற்குள் இருக்கும் உணவு பொருட்களை சாப்பிட்டு விட்டு செல்வதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.



இந்நிலையில் வால்பாறை அருகே உபாசி எஸ்டேட் பகுதியில் உள்ள பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த 4 காட்டு யானைகள், பள்ளியில் உள்ள சத்துணவு மையத்தின் சுவரை உடைத்து பொருள்களை சேதப்படுத்தியுள்ளன.



மேலும் ஜன்னல் மற்றும் கதவுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள், அங்கிருந்து குடியிருப்பு பகுதியில் நுழைந்து மாரியம்மன் கோவில் சுவரை இடித்து சேதப்படுத்தியுள்ளன.



இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இந்நிலையில், காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால் அச்சத்தில் உள்ள பொதுமக்கள், காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...