கோவை கணபதி அருகே தேங்காய் பறித்தபோது தவறி விழுந்து முதியவர் பலியான சோகம்..!

கணபதி அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் மாடியில் இருந்து தேங்காய் பறித்துக் கொண்டிருந்த முதியவர் தவறி விழுந்து உயிரிழந்த நிலையில், சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (61). இவர் கோவை கணபதி அருகேயுள்ள மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள தனது மகனின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவர் வீட்டின் மாடியில் நின்றபடி, அருகே இருந்த தென்னை மரத்தில் தேங்காய் பறித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர், மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த ராஜேந்திரனை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சரவணம்பட்டி போலீசார் ராஜேந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...