ஊட்டியில் ஜான் சல்லிவனின் நினைவு தினம் அனுசரிப்பு - அமைச்சர் ராமச்சந்திரன் மரியாதை!

ஊட்டி நகரை கண்டறிந்து, நகரத்தை கட்டமைத்த ஆட்சியர் ஜான் சல்லிவனின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் மரியாதை.


நீலகிரி: 200 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி நகரினை கண்டறிந்து கட்டமைத்த ‘ஜான் சல்லிவன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை நகரத்தை 200 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய கோவை மாவட்ட ஆட்சியராக இருந்த ‘ஜான் சல்லிவன்” கண்டறிந்து ஊட்டியைக் கட்டமைத்தார்.



மேலும் வெளி உலகிற்கும் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் அவரது நினைவு தினம் ஆண்டுதோறும் ஜனவரி 16ஆம் தேதி கடைபிடிக்கபட்டு வருகிறது. இதையொட்டி இன்று உதகை தாவரவியல் பூங்கா சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் பேசிய அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்டத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி நகரினை கண்டறிந்து கட்டமைத்த ஜான் சல்லிவன், ஜூன் 15 ஆம் நாள் இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் பிறந்தார். ஜான் சல்லிவன் 1815 முதல் 1830 வரை கோவை மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்துள்ளார்.

இவர் இயற்கை சுற்றுச்சூழலில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் முயற்சியாலேயே ஊட்டி ஏரி உருவாக்கப்பட்டது. ஜான் சல்லிவன் கடந்த 1855ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதியன்று இயற்கை எய்தினார்.

அவரை நினைவு கூறும் வகையில் உதகை அரசு தாவரவியல் பூங்கா சாலை முக்கோண வடிவுள்ள இடத்தில் ரூ.20லட்சம் மதிப்பீட்டில் இரண்டு அடி உயரத்தில் மார்பளவு வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு, முதலமைச்சரால் 21.05.2022 அன்று திறந்து வைக்கப்பட்டது என்றார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...