நல்லாம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை - ஒருவர் கைது

கோவை நல்லாம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது.



கோவை: கோவை நல்லாம்பாளையம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

கோவை துடியலூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவேல் காருவாடு பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினார்.

அப்போது அவர் மணியகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப் பதிவு செய்து கோவை மத்தியச் சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த 300 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...