10 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும் - தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் நாராயணன்

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற பிராமணர் சங்க மாநாட்டிற்கு பின்னர் பேசிய நாராயணன், சமூக வலைத்தளங்களில் பிராமணர்களை இழிவாக பேசும் நபர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.



கோவை: கோவை: தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட மாநாடு கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாநில தலைவர் நாராயணன் கலந்து கொண்டார். தரமான கலாச்சாரம் மற்றும் பண்பாடு பாதுகாத்தல், இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லுதல், சங்கத்தின் சேவைகளையும் சாதனைகளையும் வெளிப்படுத்துதல், மகளிர் நலன் மற்றும் அவர்களை வலிமைபடுத்துதல் இந்த மாநாட்டின் நோக்கமாக இருந்தது.

மேலும், வணிகம் மற்றும் தொழில் முனைவோர் பலம் பேணுதல், சமூகத்தின் அனைத்து உட்பிரிவுகளையும் சங்கத்தில் இணைய செய்தல், உயர்கல்வி ஆலோசனை மற்றும் வேலை வாய்ப்பு தொழில் முனைவோர் ஆலோசனை, பிரம்மா சமுத்திரத்திற்கு அனைவருக்கும் சென்றடையும் நோக்கத்தில் இந்த மாநாடு நடைபெற்றது.



இந்த மாநாட்டிற்கு பின்னர் மாநில தலைவர் நாராயணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பிராமணர்களை இழிவாக பேசும் நபர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு 10 சதவீத இட ஒதுக்கீடு செய்ததை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டும். அறநிலையத்துறை கோவில்களில் தன்னாட்சி வாரியம் அமைக்கப்பட வேண்டும். கேரளா அரசு போல நலிந்தோர்க்கு நலவாரியத்தை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.



இந்த நிகழ்வில், பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், டாக்டர் அஸ்வின் மோகன், பேராசிரியர் ராம சீனிவாசன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...