கோவை கணுவாயில் அதிமுக எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்

கோவை கணுவாய் பேருந்து நிறுத்தம் அருகே அதிமுக சார்பாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார் தலைமையில், திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: தமிழக அரசு சொத்துவரி, பால் விலை, மின் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியதைக் கண்டித்து, பல்வேறு கட்டங்களாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி கோவை மாவட்டத்தில் ஜனவரி 3ஆம் தேதி பேரூராட்சி பகுதிகளிலும், 5ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலும், 6ஆம் தேதி நகராட்சி, மாநகராட்சி பகுதிகளிலும் போராட்டம் நடத்த திட்டமிட்ட நிலையில், கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணுவாய் பேருந்து நிறுத்தம் அருகே 2ம் கட்ட போராட்டமானது நடைபெற்றது.



அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக அரசின், சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, மற்றும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவதி நிலையில் உள்ள சாலை பராமரிப்பு, மின்விளக்குகள் பராமரிப்பு போன்றவற்றில் உள்ள அரசின் குறைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.



மேலும், தாலிக்கு தங்கம் ரத்து, மாணவர்களுக்கு மடிகணினி ரத்து, மாணவர்களுக்கான மிதிவண்டி ரத்து, மகளிர்களுக்கு வழங்கப்பட்ட அம்மா மானிய விலை ஸ்கூட்டர் ரத்து, கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து பெட்டகம் ரத்து, ஏழை, எளிய மக்களுக்கான அம்மா மினி கிளினிக்குகளை மூடியது, அம்மா உணவகங்களை தொடர்ந்து மூடிவருவது போன்ற கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலதிட்டங்களை அரசியல் காழ்புணர்ச்சியுடன் முடக்கியதாக கூறி திமுக அரசை கண்டித்தும், கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் ஒன்றிய செயலாளர்கள் கே.வி.என்.ஜெயராமன், கோவனூர் துரைசாமி, ஊராட்சி தலைவர்கள் ரவி, ரமேஷ், ரங்கராஜ், தடாகம் செளந்திரவடிவு ஆனந்தன், கட்சி முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துக் கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...