190 நாடுகளின் தலைநகர், கரன்சி உள்ளிட்டவற்றை 45 நிமிடத்தில் சொல்லி உலக சாதனை படைத்த கோவை மாணவர்

கோவையை சேர்ந்த பிரித்திவ் என்ற 10ஆம் வகுப்பு மாணவர் 190 உலக நாடுகளின் தலைநகர், கரன்சி மற்றும் நாடுகளில் பேசப்படும் மொழிகளை 45 நிமிடங்களில் கூறி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.


கோவை: கோவை செட்டி வீதி அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிசங்கர் - சங்கீதா தம்பதி. இவர்களின், இளைய மகன் பிரித்திவ், பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.



இந்நிலையில், மாணவர் பிரித்திவ், 190 நாடுகளை உலக வரைபடத்தில் கைகளால் காண்பித்தபடி அந்த நாடுகளின் தலைநகரங்கள், பேசப்படும் மொழிகள் மற்றும் கரன்சிகளை 45 நிமிடத்தில் கூறி சாதனை படைத்துள்ளார்.

ஏற்கனவே இரண்டு கைகளாலும் எழுதுவது உள்ளிட்ட ஏழு சாதனைகளை செய்துள்ள மாணவர் பிரித்திவின், இந்த புதிய சாதனை, நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.



பிரித்திவின் இந்த சாதனையை நோபல் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் தியாகு நாகராஜ் பரிந்துரை செய்தார். தொடர்ந்து தீர்ப்பாளர் அரவிந்த் பதக்கம் மற்றும் சான்றிதழை மாணவர் பிரித்திவ்-க்கு வழங்கி கவுரவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...