பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம உதவியாளர் பணிக்கான முதல் கட்டமாக 60 பேருக்கான நேர்முக தேர்வை, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மகாராஜ், பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால் உள்ளிட்டோர் நடத்தினர்.
திருப்பூர்: தமிழ்நாட்டில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து மாவட்ட வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது.
இந்நிலையில், கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் அளித்தவர்களுக்கு இன்று பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் வாசிக்கும் மற்றும் எழுதுதல் திறன் தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேர்முக தேர்வும் நடைபெற்றது.
இதில், 306 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் இன்று முதல் கட்டமாக 60 பேருக்கு தேர்வு நடைபெற்றது. மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் மகாராஜ், பல்லடம் வட்டாட்சியர் நந்தகோபால், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் தேர்வை நடத்தினர்
இந்த நேர்முக தேர்வானது வரும் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.