தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வரும் பிப்.5-ல் திருச்சியில் பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு

கோவை உக்கடத்தில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுக்கூட்டத்தில், வரும் பிப்ரவரி 5ஆம் தேதி திருச்சியில் பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் G.M. நகர் கிளை சார்பில் உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.



மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணைத் தலைவர் E. பாரூக், மாவட்ட தலைவர் அஜ்மல் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி திருச்சியில் பித்அத் ஒழிப்பு மற்றும் சமுதாய பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மாணவ மாணவியரின் விழிப்புணர்வு நாடகங்கள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஜமாஅத்தின் கோவை மாவட்ட பேச்சாளர் அப்துல் ரஹீம் மற்றும் TNTJ பேச்சாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன்! எதற்கு? என்ற தலைப்பில் உரையாற்றினர்.



அதேபோல், மாநில துணைத் தலைவர் E.பாரூக், சமூக சீர்கேடுகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...