ஊராட்சி தலைவர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது - கோவையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் குற்றச்சாட்டு

ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதிகள் நிறுத்தப்பட்டுள்ளன, ஊராட்சி மன்றத் தலைவர்கள் பொறுப்பேற்றும் இதுவரை எந்த அதிகாரங்களும் வழங்கப்படவில்லை எனவும் குற்றச்சாட்டு.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கோவை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவர் பிரபு என்ற திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோதவாடி ஊராட்சி தலைவர் ரத்தினசாமி வரவேற்று பேசினார்.



மேலும், இந்த கூட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் அரசை முனியாண்டி கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார், கிராம சபை கூட்டத்தில் போடப்படும் தீர்மானங்கள் அனைத்தையும் அரசு நிறைவேற்ற வேண்டும் 15 வது நிதிக்குழுவை ஊராட்சி மன்ற தீர்மானத்தின் அடிப்படையில் செயல்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.



இதைத் தொடர்ந்து தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் அரசை முனியாண்டி செய்தியாளர்களிடம் பேசியதாவது, ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. ஊராட்சி மன்றத் தலைவர்கள் பொறுப்பேற்றும் இதுவரை எந்த அதிகாரங்களும் வழங்கப்படவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...