சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி - சேலத்தில் தனிமைபடுத்தி சுகாதாரத்துறை கண்காணிப்பு..!

சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரை சேலத்தில் தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பு.



கோவை: உருமாறிய கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவில் சர்வதேச விமான நிலையங்களில் “ 2 சதவீத ரேண்டம் “ முறையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு, சிங்கப்பூர் மற்றும் சார்ஜாவில் இருந்து 9 சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டுள்ளது. அதில் 1,357 பயணிகள் வந்துள்ளனர். அவர்கள் 2 சதவீதம் 64 பேர் ரேண்டம் முறையில் பரிசோதனை செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த சேலம் மாவட்டத்தை சேர்ந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவர் சேலம் மாவட்டத்தில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மேலும் சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே அவருடன் விமானத்தில் வந்த பயணிகளும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...