கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 50 மற்றும் 51 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.71.20 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கான பூமி பூஜையை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.
கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 50வது வார்டுக்கு உட்பட்ட உடையாம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 2022-2023 நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.31.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கழிப்பிடம் கட்டுதல் மற்றும் வகுப்பறைகள் புனரமைக்கும் பணிக்கான பூமி பூஜை விழாவில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, 50வது வார்டுக்கு உட்பட்ட உடையாம்பாளையம் மாநகராட்சி தொடக்க பள்ளியில் 2022-2023 நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கழிப்பிடம் கட்டுதல் மற்றும் வகுப்பறைகள் புனரமைக்கும் பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் பணியினை விரைவாக தரமாகவும் செய்து முடித்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து 51வது வார்டுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் 2022-2023 நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் 668 மீட்டர் தொலைவிற்கு புதிதாக தார் சாலை அமைக்கும் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கீதா சேரலாதன், அம்சவேணி மணிகண்டன், உதவி ஆணையர் முத்து ராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் சுந்தா்ராஜன், உதவி பொறியாளர்கள் சீனிவாசன், கல்யாணசுந்தரம், சுகாதார அலுவலா் முருகா, சுகாதார ஆய்வாளர் ஜீவமுருகராஜ், மாநகராட்சி அலுவலா்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.