கோவை 50, 51வது வார்டுகளில் ரூ.71.20 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளை தொடங்கி வைத்த மேயர் கல்பனா

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் 50 மற்றும் 51 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.71.20 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கான பூமி பூஜையை மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ 50வது வார்டுக்கு உட்பட்ட உடையாம்பாளையம்‌ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்‌ 2022-2023 நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ ரூ.31.20 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கழிப்பிடம்‌ கட்டுதல்‌ மற்றும்‌ வகுப்பறைகள்‌ புனரமைக்கும்‌ பணிக்கான பூமி பூஜை விழாவில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார்.



இதனைத் தொடர்ந்து, 50வது வார்டுக்கு உட்பட்ட உடையாம்பாளையம்‌ மாநகராட்சி தொடக்க பள்ளியில்‌ 2022-2023 நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.25 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ புதிதாக கழிப்பிடம்‌ கட்டுதல்‌ மற்றும்‌ வகுப்பறைகள்‌ புனரமைக்கும்‌ பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் பணியினை விரைவாக தரமாகவும்‌ செய்து முடித்து மாணவர்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட பொறியாளருக்கு உத்தரவிட்டார்.



இதனையடுத்து 51வது வார்டுக்குட்பட்ட பாரதிபுரம்‌ பகுதியில்‌ 2022-2023 நமக்கு நாமே திட்டத்தின்கீழ்‌ ரூ.40 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 668 மீட்டர் தொலைவிற்கு புதிதாக தார்‌ சாலை அமைக்கும்‌ பணியினை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்‌.



இந்த நிகழ்ச்சியின்போது கல்விக்குழு தலைவர்‌ மாலதி நாகராஜ்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ கீதா சேரலாதன்‌, அம்சவேணி மணிகண்டன்‌, உதவி ஆணையர்‌ முத்து ராமலிங்கம்‌, உதவி செயற்பொறியாளர்‌ சுந்தா்ராஜன்‌, உதவி பொறியாளர்கள்‌ சீனிவாசன்‌, கல்யாணசுந்தரம்‌, சுகாதார அலுவலா்‌ முருகா, சுகாதார ஆய்வாளர்‌ ஜீவமுருகராஜ்‌, மாநகராட்சி அலுவலா்கள்‌ மற்றும்‌ பள்ளி ஆசிரியர்கள்‌ உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...