தமிழக அரசு சமீபத்தில் அமல்படுத்திய புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை உக்கடம் அருகே சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன் தொழிற் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் SDTU (சோசியல் டெமாக்ரடிக் டிரேடு யூனியன்) தொழிற்சங்கத்தினர் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய மோட்டார் வாகன சட்டம் ரத்து செய்ய வேண்டும், பழைய 44 தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
மேலும் தமிழக அரசு, தொழிலாளர்கள் மீது அபராதம் திணிக்க கூடாது எனவும், ஒன்றிய அரசு தொழிலாளர் விரோத சட்டங்களை அமல்படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது.
SDTU தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.