தமிழக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, ஆகியவற்றை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணியினர் கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம்.
கோவை: தமிழக அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, ஆகியவற்றை கண்டித்து கோவை மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகரத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் கார்த்திக்கண்ணன் முன்னிலை வகித்தார். மேலும் இதில் மாவட்டத் தலைவர் வி.வி.வாசன் மூத்த நிர்வாகி குனியமுத்தூர் ஆறுமுகம், உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் காரணமாக வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.