கோவை மலுமிச்சம்பட்டி அருகே பீடா கடையில், கஞ்சா சாக்லேட்டுகள் வைத்து விற்பனை செய்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஷஹாதிப் ராய் என்ற இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 125 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை: கோவை மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள பீடா கடையில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் செட்டிபாளையம் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் அங்குச் சென்று பீடா கடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பீடா கடையில் சாக்லெட் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அதனை சோதனை செய்த போது அது கஞ்சா சாக்லெட்டுகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஷஹாதிப் ராய் (25) என்பதும், தற்போது கோவை சூலூர் தென்னம்பாளையம் பகுதியில் நண்பர்களோடு தங்கிக் கொண்டு, மலுமிச்சம்பட்டி பகுதியில் பீடா கடை நடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் அதனுடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த சுமார் 195 கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்த போலீஸார் ஷஹாதிப் ராவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பீடா கடையில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.