கோவையில் வேளாண் வளர்ச்சி திட்ட விளக்கச் சிறப்பு பிரச்சார ஊர்திகளை துவக்கி வைத்த ஆட்சியர் சமீரன்

ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண் பொறியியல் துறை சார்பில் நடைபெற்ற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட விளக்க சிறப்பு பிரச்சார ஊர்திகளை ஆட்சியர் சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.


கோவை: ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சி, தன்னிறைவான கிராமத்தை உருவாக்கும் நோக்கில், கடந்த மே மாதம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 5 ஆண்டுகளில், தமிழகத்தில் உள்ள சுமார் 12,525 கிராம பஞ்சாயத்துகளில் இத்திட்டத்தை செயல்படுத்த திட்டங்கள் வகுக்கப்பட்டன.



கிராம வேளாண் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல். மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தல், ஊரக வளர்ச்சி துறையின் மூலமாக பண்ணை குட்டை அமைத்தல், கூட்டுறவு சங்கங்களின் மூலம் அதிக பயிர் கடன்கள் வழங்குதல். பாசன நீர் வழித் தடங்களை தூர்வாருதல், உள்ளிட்ட கிராமப் பொருளாதார மேம்பாட்டுக்காக உள்ளிட்ட பல திட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் வரும்.

இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ள நிலையில், இது குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வேளாண் மற்றும் உழவர் நலத்துறையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் சார்பாக மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம் வட்டாரங்களில் சிறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வண்ணம் பிரச்சார ஊர்திகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.



இந்த வாகனங்களில் சிறுதானிய பயிர்கள் குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் விவசாயிகள் சிறுதானிய பயிர்களை விளைவிக்கும் பொழுது அதனை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த விளக்க பலகைகள் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் சௌமியா, வேளாண்மை இணை இயக்குனர் முத்துலட்சுமி, வேளாண்மை துணை இயக்குனர் தமிழ்ச்செல்வி, கிருஷ்ணவேணி, பெருமாள் சாமி, உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Tourist Entry Restricted due to flooding in Athirappilly Waterfalls for the third consecutive day

Continuous heavy rainfall over the Western Ghats has left the Athirappilly Waterfalls in spate for the third consecutive...

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...