ஆலாந்துறை ஶ்ரீ தர்மதாஸ்தா ஐயப்பன் கோவில் விளக்கு பூஜை - 2 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

கோவை ஆலந்துறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு நாட்கள் விளக்கு பூஜை நடைபெற்றது.32 ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்த விளக்கு பூஜையில், 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.



கோவை: கோவை ஆலந்துறை ஶ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் விளக்கு பூஜையில் சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவை ஆலந்துறையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், இந்த ஆண்டு மார்கழி 1 தேதி வெள்ளிக்கிழமை விளக்கு பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் துவங்கியது.7 நாட்களுக்கு நடைபெறும் இந்த பூஜைகளில், ஆலந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொள்வர்.

அதன்படி, நேற்று சனிக்கிழமை அகண்ட நாமம் பூஜை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ தர்மசாஸ்தா ஐயப்பன் விளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.

32 ஆவது ஆண்டாக நடைபெற்ற இந்தவிளக்கு பூஜையில், அருகே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு விளக்குகளை ஏந்தி குழந்தைகள் தங்கள் பெற்றோர்களுடன் பங்கேற்றனர்.

சுமார் 300க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக கோயிலை நோக்கி நடந்து சென்றனர். இந்த ஊர்வலத்தில் 98 பவுன் எடை கொண்ட ஐயப்பன் தங்க விக்கிரகம்ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தின் போது வேண்டுதலுக்காக பாலைக் குச்சிகளை ஏந்தி வந்த பக்தர்கள், நடனமாடியவாறு ஊர்வலம் வந்து வழிபட்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...