கோவை மாவட்ட அதிமுகவில் இருந்து 3,000 பேர் விரைவில் திமுகவில் இணையவுள்ளனர் - கோவை செல்வராஜ்

வட கோவையில் உள்ள திமுக அலுவலகத்தில் பேட்டியளித்த அவர், அதிமுக என்னும் கம்பெனி நான்காக பிரிந்துள்ளது, 6 மாதத்திற்குள் அதிமுக முழுவதுமாக கரைந்து போகும் என்றும், விரைவில் கோவை மாவட்ட அதிமுகவில் இருந்து 3000 பேர் திமுகவில் இணைய உள்ளனர் என்றார்.


கோவை: கோவை மாவட்டம் வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் இன்று கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது அவர் பேசியதாவது, முந்தைய அதிமுக ஆட்சியில் நடைபெற்ற எல்.இ.டி பல்பு, கோவை குளங்கள் தூர்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் தொடர்பாக என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. அடுத்த வாரம் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் நேரில் ஒப்படைக்க உள்ளேன்.

கோவை மாவட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் உட்பட 3 ஆயிரம் பேர் அதிமுகவில் இருந்து விலகி விரைவில் முதலமைச்சர் தலைமையில் திமுகவில் இணைவார்கள். கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலில் மத்திய அரசிடம் பேசி தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதிகளை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவிற்கு தமிழகத்தில் வருங்காலம் இல்லை. ஓபிஎஸ் உடன் தாம் உண்மையாக இருந்த போதும் அவர் அவ்வாறு இல்லை. இப்போது அவர் குறித்து விமர்சிக்க எதுவும் இல்லை.

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சாலைகள் சேதமானது குறித்து அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் தற்போதைய தமிழக அரசு மீது அரசியல் காரணங்களுக்காக குற்றம் சாட்டி வருகின்றனர்.

அன்னூர் டிட்கோ விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கில் சுமார் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதை தடுக்கும் வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...