கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டெல்லியில் உழவர் தினத்தன்று தொடர் காத்திருப்பு போராட்டம் - தென்னை விவசாயிகள் அறிவிப்பு

கோவை சூலூரில் நடைபெற்ற தென்னை விவசாயிகள் கோரிக்கை மாநாட்டில் தேங்காய் கொள்முதல் விலை உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், டெல்லியில் விவசாயிகள் போராடியது போல் உழவர் தினத்தன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றம்.



கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தென்னை உழவர்கள் கோரிக்கை மாநாடு இன்று நடைபெற்றது.



தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற இந்த மாநாட்டை இந்திய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத், தமிழக விவசாய பாதுகாப்பு சங்க நிறுவன தலைவர் ஈசன் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.



இந்த மாநாட்டில், தென்னை விவசாயிகளின் பல நாள் கோரிக்கைகளான தேங்காய் கொள்முதல் விலையை ரூபாய் 150 இருந்து ரூபாய் 250 ஆக உயர்த்த வேண்டும், கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதி, நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை, தென்னைக்கு பரவும் வாடல் நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.



இதனை தொடர்ந்து மாநாட்டில் தமிழக விவசாய பாதுகாப்பு சங்க நிறுவன தலைவர் ஈசன் பேசியதாவது, தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மத்திய மாநில அரசுகளை கண்டித்து, டெல்லியில் விவசாயிகள் கடந்தாண்டு போராடியதை போல 2023ஆம் ஆண்டு உழவர் தினத்தன்று தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...