பென்சன் பெறும் வயதை 55ஆக உயர்த்துவது, உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் (சிஐடியு) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்க வேண்டும்.
உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்தரப்பு குழுக்களை அமைத்திட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறிய ஓய்வூதியம் 3,000த்தை உடனடியாக வழங்க வேண்டும்,
பென்ஷன் பெரும் வயதை 55 ஆக மாற்றிட வேண்டும். தமிழக அரசு டாஸ்மாக் குடோனில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இறக்கு கூலி உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரயில்வே கூட் செட்டில் பணிபுரியும் சுமை பணி தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ரயில்வேயில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு குடிநீர், குளியல் அறை, அடையாள அட்டை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மளிகை மார்க்கெட்டில் வேலை செய்யும் சுமைப்பணி தொழிலாளர்களின் கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.