ஆசிரியர்களும் கைவிட்டால் மாணவர்களை செரிவுபடுத்த ஆள் இல்லை - கோவையில் தமிழக மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் இயக்குநர் நாகராஜ முருகன்

கோவை ராமநாதபுரத்தில் நடைபெற்ற சிறந்த மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில், ஆசிரியர்கள் தான் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்களை கவனிக்க வேண்டும் என மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இயக்குநர் நாகராஜ முருகன் கூறியுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள சிறந்த மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.



இதில் தமிழக மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர் நாகராஜ முருகன், மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், தனியார் பள்ளி நிறுவனர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் பேசியதாவது, கோவை பல்வேறு பாரம்பரியங்களை கொண்டுள்ளது. மேலும் தொழில் வளர்ச்சி, கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதி என அனைத்திற்கும் பெயர் போன மாவட்டமாக உள்ளது.

தமிழக முதல்வர் பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு கூட்டங்கள் நடத்தி மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் கருத்துக்களையும் கேட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பள்ளிக்கல்வித்துறை ஒரே குடைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போதைய அரசு மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்களை நியமனம் செய்து அரசாணையை வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வி துறையில் எந்த குறை இருந்தாலும் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதற்கு தமிழக அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும். மேலும் நமது மாநிலம் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என கல்வியில் சிறந்த மாநிலமாக உள்ளது. மாநில பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இன்றைய சூழலில் சமூக வலைத்தளங்கள், செல்போன்களுக்கு மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர்.

சமீப காலமாக போதை பழக்கத்திற்கு ஆளாகி வருகிறார்கள், இதுவரை அப்படி இல்லை, மாணவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும். ஆசிரியர்கள் வெறும் பாடம் கற்றுக் கொடுக்கும் இயந்திரமாக மட்டும் இருக்க கூடாது.

பாடத்திட்டத்துடன் சிறப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களை கைவிட்டால் அவர்களை செரிவுபடுத்த ஆள் இல்லாமல் போய்விடும், ஆசிரியர்கள் தான் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்களை கவனிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...