கோவை ஆனைக்கட்டியில் பழங்குடியின மக்களுக்கான நூலகத்தை திறந்து வைத்த ஆட்சியர் சமீரன்

ஆனைகட்டியில் உள்ள வித்யாவனம் என்ற பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற ஆட்சியர் சமீரன், அதே பள்ளியில் பழங்குடியின மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை திறந்து வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் உள்ள வித்யா வனம் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.



இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டார். பின்னர் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களிடம் அவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.



இதனையடுத்து அப்பள்ளியில் பழங்குடியின மக்களுக்காக கட்டப்பட்டுள்ள நூலகத்தை திறந்து வைத்து பழங்குடியின மக்களுக்காக நூலகம் கட்டிய பள்ளி நிர்வாகத்தினரை பாராட்டினார்.



அதனை தொடர்ந்து ஆனைக்கட்டி பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு வழங்கப்படும் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தார். பின்னர் சலீம் அலி பறவைகள் சரணாலயத்தில் அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் "போலாம் ரைட்" நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...