கோவை குனியமுத்தூரில் சாலையோரம் இருந்த சரக்கொன்றை மரத்தை வெட்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு

குனியமுத்தூர் - சுந்தராபுரம் இணைப்பு சாலையின் ஓரத்தில் இருந்த சரக்கொன்றை மரம் வெட்டப்பட்டதை தடுத்தி நிறுத்திய அப்பகுதி மக்கள் விஏஓ மற்றும் காவல் ஆய்வாளரிடம் மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிராமத்தில் உள்ள குனியமுத்தூர் முதல் சுந்தராபுரம் இணைப்பு சாலையில் அப்போலோ மருந்தகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகத்தின் அருகில், சுமார் 10 வயது மதிப்புத்தக்க சரக்கொன்றை மரம் ஒன்று இருந்தது.



இந்நிலையில், இந்த மரத்தை வட இந்தியர் ஒருவர் வெட்டியதாக கூறப்படுகிறது. இதை அங்கிருந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதையடுத்து, மரம் வெட்டியது தொடர்பாக வருவாய் ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அரசு நிலங்களில் இருக்கும் மரத்தை முறையாக அனுமதி பெறாமல் வெட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குனியமுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குனியமுத்தூர் காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மரத்தை வெட்டியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...