திருப்பூர் அரிசி கடை வீதியில் ஜில்லா ஜென்ரல் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
திருப்பூர்: திருப்பூர் அரிசி கடை வீதியில் உள்ள அரிசி கடைகளில் அரிசி மூட்டைகளை ஏற்றி இறக்கும் பணி செய்து வரும் சுமை பணி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவடைந்து 11 மாத காலமாகியும் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி புதிய கூலி உயர்வு ஏற்படுத்தவில்லை என கூறப்படுகிறது.

இதனை கண்டித்தும், நியாயமான தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஏஐடியுசி திருப்பூர் ஜில்லா ஜென்ரல் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் அரிசி கடை வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.