கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 22, 24, 28, 52 மற்றும் 82 ஆகிய வார்டுகளில் மாநகராட்சி சார்பில் செய்து முடிக்கப்பட்ட பணிகள் மற்றும் புதிய திட்ட வரைவுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டனர்.
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து முடிக்கப்பட்ட பணிகள் மற்றும் முடிக்கப்பட்ட பணிகள் குறித்தும் புதிய திட்ட வரைவுகள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக கோவை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண். 22, 24க்கு உட்பட்ட கொடிசியா சாலை முதல் என்.ஆர்.ஐ.கார்டன் வழியாக விளாங்குறிச்சி இணைப்பு சாலை, வார்டு எண்.52க்கு உட்பட்ட .'.பன்மால் சாலை முதல் பி.பி.எஸ்.காலனி வரை இணைப்பு சாலை, வடக்கு மண்டலம் வார்டு எண்.28க்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் சாலை முதல் ஸ்ரீவாரி அபார்ட்மென்ட் சாலை வழியாக அவிநாசி சாலை வரையிலான இணைப்பு சாலை ஆகியவற்றின் திட்ட வரைவுகள்.
நவஇந்தியா சாலை, எஸ்.என்.ஆர் கல்லாரி சாலையில் தமிழ்நாடு நகர்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022-23ன் கீழ் ரூ.49.70 லட்சம் மதிப்பீட்டில் 655 மீட்டர் நளமும், 12 மீட்டர் அகலத்திற்கும் தார் சாலை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, தெற்கு மண்டலம், வார்டு எண்.86க்கு உட்பட்ட உக்கடம் புல்லுக்காடு பகுதியில் தமிழ்நாடு அரசின் நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வலர்களை கொண்டு வண்ணம் தீட்டும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், ஆகியோர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

மேலும், தமிழ்நாடு அரசின் நகர்புற வாழ்விட மேம்பாடு வாரிய பங்களிப்பாக ”நம் குடியிருப்பு நம் பொறுப்பு” என்ற திட்டத்தின் கீழ் ரூ.7.56 லட்சம் மதிப்பீட்டிலான காசோலையை தமிழ்நாடு அரசின் நகர்புற வாழ்விட மேம்பாடு வாரிய குடியிருப்பு மக்கள் மேலாண்மை திட்டமிடுதல் பணிக்காக மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.
இந்த ஆய்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையாளா் மரு.மோ.ஷர்மிளா, மதிப்பிற்குரிய துணை மேயர் வெற்றிசெல்வன், மண்டல தலைவர்கள் தனலட்சுமி, இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர்கள் பூபதி, கோவை பாபு செல்வகுமார், அகமது கமா, கண்ணகி ஜோதிபாசு, உதவி ஆணையார்கள் அண்ணாதுரை, மகேஷ் கனகராஜ், முத்து இராமலிங்கம், மோகனசுந்தரி, நகரமைப்பு அலுவலர் கருப்பாத்தாள், தமிழ்நாடு அரசின் நகா்புற வாழ்விட மேம்பாடு வாரிய செயற்பொறியாளர் வெங்கடேசன், மாநகராட்சி செயற்பொறியாளா் முருகேசன், உதவி செயற்பொறியாளா்கள் செந்தில்பாஸ்கர், சுந்தரராஜன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி, உதவி நகரமைப்பு அலுவலா்கள் ஜெயலட்சுமி, விமலா, சுகாதார அலுவலா் ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.