கோவையில் முடிக்கப்பட்ட பணிகள், திட்ட வரைவுகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 22, 24, 28, 52 மற்றும் 82 ஆகிய வார்டுகளில் மாநகராட்சி சார்பில் செய்து முடிக்கப்பட்ட பணிகள் மற்றும் புதிய திட்ட வரைவுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் செய்து முடிக்கப்பட்ட பணிகள் மற்றும் முடிக்கப்பட்ட பணிகள் குறித்தும் புதிய திட்ட வரைவுகள் தொடர்பாகவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டனர்.



இதுதொடர்பாக கோவை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோவை‌ மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ வார்டு எண்‌. 22, 24க்கு உட்பட்ட கொடிசியா சாலை முதல்‌ என்‌.ஆர்‌.ஐ.கார்டன்‌ வழியாக விளாங்குறிச்சி இணைப்பு சாலை, வார்டு எண்‌.52க்கு உட்பட்ட .'.பன்மால்‌ சாலை முதல்‌ பி.பி.எஸ்‌.காலனி வரை இணைப்பு சாலை, வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.28க்கு உட்பட்ட ஆவாரம்பாளையம்‌ சாலை முதல்‌ ஸ்ரீவாரி அபார்ட்மென்ட்‌ சாலை வழியாக அவிநாசி சாலை வரையிலான இணைப்பு சாலை ஆகியவற்றின்‌ திட்ட வரைவுகள்.

நவஇந்தியா சாலை, எஸ்‌.என்‌.ஆர்‌ கல்லாரி சாலையில்‌ தமிழ்நாடு நகர்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டம்‌ 2022-23ன்‌ கீழ்‌ ரூ.49.70 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 655 மீட்டர் நளமும்‌, 12 மீட்டர் அகலத்திற்கும்‌ தார்‌ சாலை அமைக்கப்பட்டு பொதுமக்கள்‌ பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையாளர்‌ பிரதாப்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



இதனைத்‌ தொடர்ந்து, தெற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.86க்கு உட்பட்ட உக்கடம்‌ புல்லுக்காடு பகுதியில்‌ தமிழ்நாடு அரசின்‌ நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மற்றும்‌ தன்னார்வலர்களை கொண்டு வண்ணம்‌ தீட்டும்‌ பணிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரதாப், மாநகர காவல்‌ ஆணையாளர்‌ பாலகிருஷ்ணன், ஆகியோர் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.



மேலும்‌, தமிழ்நாடு அரசின்‌ நகர்புற வாழ்விட மேம்பாடு வாரிய பங்களிப்பாக ”நம்‌ குடியிருப்பு நம்‌ பொறுப்பு” என்ற திட்டத்தின் கீழ்‌ ரூ.7.56 லட்சம்‌ மதிப்பீட்டிலான காசோலையை தமிழ்நாடு அரசின்‌ நகர்புற வாழ்விட மேம்பாடு வாரிய குடியிருப்பு மக்கள்‌ மேலாண்மை திட்டமிடுதல்‌ பணிக்காக மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.

இந்த ஆய்வுகளின் போது மாநகராட்சி துணை ஆணையாளா்‌ மரு.மோ.ஷர்மிளா, மதிப்பிற்குரிய துணை மேயர்‌ வெற்றிசெல்வன்‌, மண்டல தலைவர்கள்‌ தனலட்சுமி, இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ பூபதி, கோவை பாபு செல்வகுமார்‌, அகமது கமா, கண்ணகி ஜோதிபாசு, உதவி ஆணையார்கள்‌ அண்ணாதுரை, மகேஷ் கனகராஜ்‌, முத்து இராமலிங்கம்‌, மோகனசுந்தரி, நகரமைப்பு அலுவலர்‌ கருப்பாத்தாள்‌, தமிழ்நாடு அரசின்‌ நகா்புற வாழ்விட மேம்பாடு வாரிய செயற்பொறியாளர்‌ வெங்கடேசன்‌, மாநகராட்சி செயற்பொறியாளா்‌ முருகேசன்‌, உதவி செயற்பொறியாளா்கள்‌ செந்தில்பாஸ்கர்‌, சுந்தரராஜன்‌, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்‌ கருப்புசாமி, உதவி நகரமைப்பு அலுவலா்கள்‌ ஜெயலட்சுமி, விமலா, சுகாதார அலுவலா்‌ ராதாகிருஷ்ணன்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலா்கள்‌, தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்‌.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...