உக்கடம் சிஎம்சி காலனியில் மேம்பாலம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு பணிகள்-மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு

உக்கடம் சிஎம்சி காலனியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் மற்றும் 520 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தின் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் சமீரன்,பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


கோவை: நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு ஒப்பணகாரவீதி வரை 121.82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலம், திண்டுக்கல்- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையான கரும்புகடையில் ஆரம்பித்து உக்கடம் மார்க்கெட் பகுதியில் முடிவடைகிறது. கரும்புக்கடை முதல் உக்கடம் சந்திப்பு வரையிலான 4 வழி மேம்பாலம் உக்கடம் ஒப்பணக்கார விதி வரை இருவழி இறங்கு தனம் என மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.



இந்நிலையில் உக்கடம் சி.எம்.சி காலனி பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாலப்பணிகளை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



மேலும் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சிஎம்சி காலனியில் 49 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 520 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பையும் ஆய்வு செய்த ஆட்சியர் சமீரன், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



அதனைத்தொடர்ந்து உக்கடம் மீன் அங்காடியில் மீன்கள் சுகாதாரமான முறையில் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்தும்,கடைகள் சுத்தமாக பராமரிக்கப்படுகின்றதா என்பது குறித்தும் ஆட்சியர் சமீரன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் செயற்பொறியாளர் வெங்கடேசன், உதவிப்பொறியாளர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...