கோவை தெற்கு, மேற்கு மற்றும் மத்திய மண்டலத்திற்குட்பட்ட காய்கறி மார்க்கெட்டுகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளா் பிரதாப், மழைநீர் வடிகால்கள், பாதாள சாக்கடைகள் உள்ளிட்டவற்றை பழுதுநீக்கி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கோவை: தெற்கு மண்டலம் வார்டு எண்.96க்குட்பட்ட சுந்தராபுரம் தக்காளி மார்க்கெட், மேற்கு மண்டலம், வார்டு எண்.45, மேட்டுப்பாளையம் பிரதான சாலை பகுதியிலுள்ள எம்.ஜி.ஆர். மார்க்கெட், மத்திய மண்டலத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அண்ணா மார்க்கெட் ஆகிய மார்க்கெட்டுகள் மற்றும் அவற்றை சுற்றியுள்ள பகுதிகளை மாநகராட்சி ஆணையாளா் பிரதாப் ஆய்வு செய்தார்.
மார்க்கெட் அமைந்துள்ள சாலை பகுதிகள், மழைநீர் வடிகால்கள், கழிவறைகள்,பாதாள சாக்கடைகள் உள்ளிட்டவற்றை பழுநீக்கி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள உரிய திட்ட மதிப்பீடு தயாரித்து அரசிற்கு அனுப்பிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் ஷர்மிளா, தெற்கு மண்டல தலைவா் தனலட்சுமி, மேற்கு மண்டல தலைவர் தெய்வயானை தமிழ்மறை, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், முருகேசன், அப்துல் காதர், தெற்கு மண்டல உதவி ஆணையா் அண்ணாதுரை, மேற்கு மண்டல உதவி ஆணையா் சேகர், செயற்பொறியாள,உதவி செயற்பொறியாளர்கள்,உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.