கோவையில் பிரதான சாலைகளில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர் பிரதாப்

கோவை தெற்கு, மேற்கு மற்றும்‌ மத்திய மண்டலத்திற்குட்பட்ட காய்கறி மார்க்கெட்டுகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளா்‌ பிரதாப், மழைநீர் வடிகால்கள், பாதாள சாக்கடைகள்‌ உள்ளிட்டவற்றை பழுதுநீக்கி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.



கோவை: தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.96க்குட்பட்ட சுந்தராபுரம்‌ தக்காளி மார்க்கெட்‌, மேற்கு மண்டலம்‌, வார்டு எண்‌.45, மேட்டுப்பாளையம்‌ பிரதான சாலை பகுதியிலுள்ள எம்‌.ஜி.ஆர்‌. மார்க்கெட்‌, மத்திய மண்டலத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம்‌ சாலையில்‌ அமைந்துள்ள அண்ணா மார்க்கெட்‌ ஆகிய மார்க்கெட்டுகள்‌ மற்றும்‌ அவற்றை சுற்றியுள்ள பகுதிகளை மாநகராட்சி ஆணையாளா்‌ பிரதாப் ஆய்வு செய்தார்.



மார்க்கெட்‌ அமைந்துள்ள சாலை பகுதிகள்‌, மழைநீர் வடிகால்கள்‌, கழிவறைகள்‌,பாதாள சாக்கடைகள்‌ உள்ளிட்டவற்றை பழுநீக்கி புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள உரிய திட்ட மதிப்பீடு தயாரித்து அரசிற்கு அனுப்பிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்‌.



இந்த ஆய்வின்போது, துணை மேயர்‌ வெற்றிசெல்வன்‌, மாநகராட்சி துணை ஆணையாளர்‌ ஷர்மிளா, தெற்கு மண்டல தலைவா்‌ தனலட்சுமி, மேற்கு மண்டல தலைவர்‌ தெய்வயானை தமிழ்மறை, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌ செந்தில்குமார்‌, முருகேசன்‌, அப்துல்‌ காதர், தெற்கு மண்டல உதவி ஆணையா்‌ அண்ணாதுரை, மேற்கு மண்டல உதவி ஆணையா்‌ சேகர், செயற்பொறியாள,உதவி செயற்பொறியாளர்கள்,உதவி பொறியாளர்கள் மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்‌.





Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...