கோவையில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பறிமுதல் - 4.5 டன் அரிசி பறிமுதல்

அன்னம்பாளையத்தில் உள்ள மீன் பண்ணையில் 50 கிலோ எடையுள்ள 90 ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சுமார், 4.5 டன் எடை கொண்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.



கோவை: தமிழ்நாட்டில் இருந்து கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. தமிழ்நாட்டில் இலவசமாகவும், குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி கிடைக்கப் பெறுவதால், அதனை கொள்முதல் செய்யும் சட்டவிரோத கும்பல், அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் சென்று, விற்று லாபம் பார்த்து வருகின்றனர்.

ரேஷன் அரிசி கடத்தலை தடுப்பதற்காக குடிமை பொருள் வழங்கல் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடி வாகன தணிக்கை மற்றும் சந்தேகிக்கும் படியாக உள்ள இடங்களில் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன்படி, இன்று குடிமை பொருள் அதிகாரிகளின் சோதனையின் போது, கோவை அன்னம்பாளையம் பகுதியில் மீன் பண்ணையில் உள்ள ஷெட் ஒன்றில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

சோதனையில், 50 கிலோ எடையுள்ள 90 ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சுமார், 4.5 டன் எடை கொண்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.



அப்போது, அங்கிருந்த மாரிமுத்து என்பவரை குடிமை பொருள் அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்திய போது, அவர் கேரள உள்ளிட்டு வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசியை கடத்தி விற்று வருவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மாரிமுத்துவை அதிகாரிகள் கைது செய்தனர்.

மேலும், அரிசி கடத்தலில் ஈடுபட்ட சக்தி பெருமாள், சொக்கலிங்கம், கருப்பு, துரை உள்ளிட்ட நான்கு பேரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து சட்ட விரோதமாக ரேஷன் அரிசி கடத்தி வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குடிமைப் பொருள் புலனாய்வு காவல்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...