கோவை கணுவாய் அருகே கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் கைது - ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்..!

கணுவாய் பகுதியில் போலீசார் நடத்திய சோதனையில் வடமாநில இளைஞர் அஜய் பாஸ்போர் என்பவர் அதே பகுதியில் டீ மாஸ்டராக இருந்து கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.


கோவை: கோவை மாவட்டம் கணுவாய் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தடாகம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், உதவி ஆய்வாளர் தலைமையில் அங்கு சென்ற போலீசார் கணுவாய் ராமர் கோவில் வீதி பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கிருந்த வட மாநில இளைஞர் ஒருவரை பிடித்து விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பிடிபட்ட நபர் மேகாலயா மாநிலத்தை சேர்ந்த அஜய் பாஸ்போர் (24) என்பதும், இவர் அதே பகுதியில் டீ மாஸ்டராக வேலை செய்து கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ஒரு கிலோ கஞ்சா மற்றும் பத்தாயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

டீ மாஸ்டராக வேலை செய்து வந்த வடமாநில இளைஞர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...