தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு நூதன விற்பனையில் ஈடுபட்ட விவசாயிகள்..!

தக்காளிக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், தக்காளியை ஒரு கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை செய்து நூதன ஆர்ப்பாட்டம்.



கோவை: தக்காளிக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனக்கூறி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வருகை தந்தனர். அப்போது, ஒரு கிலோ தக்காளியை 5 ரூபாய்க்கு நூதன விற்பனையில் ஈடுபட்டனர்.



இதன் மூலம் சேகரிக்கப்படும் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.



இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது, கடந்த ஒரு மாதமாக தக்காளி பயிரிட்ட விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் பனியின் காரணமாக தக்காளியில் வெடிப்பு அழுகல் ஏற்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ 6 ரூபாய்க்கு தக்காளியை வாங்குகிறார்கள். மக்களுக்கு 25 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இதனை அரசு முறைப்படுத்த வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.



இதனைத் தொடர்ந்து தக்காளிக்கு உரிய விலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...