ஆடுகளை விஷம் வைத்து கொலை செய்த விவகாரம் - புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் அல்வாவுடன் வந்து நூதனமான முறையில் மனு

கோவை வேடப்பட்டி அருகே கடந்த 2019ஆம் ஆண்டு ஆடுகளை விஷம் வைத்தவர்கள் மீது ஜெகநாதன் என்பவர் காவல்நிலையம், ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்காததால் கையில் அல்வாவுடன் வந்து நூதனமாக மனு அளித்துள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு இவரது 12 ஆடுகளை இவரது வீட்டின் அருகில் வசிக்கும் அதிமுகவை சேர்ந்த செந்தில்,பழனியப்பன்,பாண்டியன் ஆகியோர் விஷம் வைத்து கொன்று விட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக அவர் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக புகார் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை மனு அளித்துள்ளார். இந்நிலையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கையில் அல்வாவுடன் வந்த ஜெகநாதன், நூதனமான முறையில் மனு அளித்தார்.



அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, எனது புகார் தொடர்பாக எந்த நடவடிக்கை எடுக்காமல் கடந்த மூன்று ஆண்டுகளாகஅலைக்கழிக்கின்றனர். எனது ஆடுகளை திருப்பி அளித்து குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மூன்று ஆண்டுகளாக எனது புகாரை விசாரிக்காமல் அல்வா கொடுத்தவர்களுக்கு தற்போது அல்வா கொடுக்கவே அல்வாவை எடுத்து வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...