கோவை சித்திரைசாவடியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

சித்திரைசாவடி அருகே பொதுமக்களின் எதிர்ப்பை மீறி திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை இடையூறாக உள்ளதாக கூறி அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.



கோவை: கோவை மாவட்டம் பூலுவபட்டி அடுத்த சித்திரைசாவடி பகுதியில் கடந்த 2019 ஆம் ஆண்டு டாஸ்மாக் கடை அமைக்க அரசு முடிவு செய்யப்பட்டது. அப்போது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் அந்த பகுதி வளைவான பகுதி என்பதால் அங்கு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாலும், அங்கு அனுமதி கொடுக்கக் கூடாது மேலும் பெண் விவசாய தொழிலாளர்கள், கல்லூரி மாணவிகள் அவ்வழியாக செல்லக்கூடிய சூழல் உள்ளதால் டாஸ்மாக் அமைக்க அனுமதிக்க கூடாது எனவும் கூறியிருந்தனர்.

இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது அங்குள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



இந்நிலையில் டாஸ்மாக் கடை முன்பு பொதுமக்கள் இன்று திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆலந்துறை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.



இதனை தொடர்ந்து பொதுமக்களுடன் வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களும் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.



இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் மற்றும் பெண்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...