கோத்தகிரி அருகே உள்ள கக்குச்சி கிராமத்தில் நடைபெற்ற வன திருவிழாவில் 2022 மரக்கன்றுகள் நடப்பட்டன

கக்குச்சி கிராமத்தில் நடைபெற்ற வனத்திருவிழாவில் வனத்திறை அமைச்சர் ராமசந்திரன் பங்கேற்றார் . மேலும், வனத்திருவிழாவை சிறப்பிக்கு வகையில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் இயற்கை வளத்தைக் காக்கும் வகையில் நாக்குபெட்டா அமைப்பின் சார்பில் கோத்தகிரி அருகே உள்ள கக்குச்சி கிராமத்தில் மரக் கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார். நாக்குபெட்டா அமைப்பின் நிறுவனர் ராமகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார்.



இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், ஜெயபிரகாஷ் பெள்ளி, இந்திய நிலக்கரி கழக இயக்குநர் மற்றும் இந்திய தேயிலை வாரிய உறுப்பினருமான ராஜேஷ் சந்தர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில் கக்குச்சி கிராமப் பகுதிகள் மற்றும் பள்ளி வளாகம் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 2022 சோலை மர நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டன. தொடர்ந்து நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.



இப்பேரணியில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இறுதியாக படுகர் இன மக்கள் ஒன்றாககூடி தங்களது கலாச்சார நடனமாடி மகிழ்ந்தனர். இதில் கிராம மக்கள், அரசுத் துறை அலுவலர்கள், நாக்குபெட்டா அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...