கிணத்துக்கடவு அடுத்த வடபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

வடபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


கோவை: தமிழக மக்கள் நலவாழ்வுத் துறை சார்பில் கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமை கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் தொடங்கி வைத்தார்.

மருத்துவ முகாமில் வடபுதூர் கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,கண்பார்வை குறைபாடு போன்ற பல்வேறு நோய்களுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.



மருத்துவ முகாமில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், வடபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் அபின்யா அசோக்குமார், கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கல்லாபுரம் செந்தில், கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல், கிணத்துக்கடவு நகர திமுக செயலாளர் கற்பக விநாயக கனகராஜ், திமுக பொறியாளர் அணி துணை அமைப்பாளர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...