உதகை அரசு ஆரம்ப பள்ளிக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிய கரடி - வனத்துறையிடம் மக்கள் கோரிக்கை

உதகை அருகே உள்ள உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட கடசோலை பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளிக்குள் கரடியொன்று புகுந்து பொருட்களை சூறையாடியது. தொடரும் இச்சம்பவத்தால் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனபகுதிக்குள் விடுமாறு வனத்துறையிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி: உதகை அருகே உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட கடசோலை பகுதியில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர் .

வனத்தை ஒட்டி அமைந்துள்ள கடசோலை, ஆல்காடு பகுதிகளில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகஇப்பகுதியில் கரடி நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

இன்று காலை பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த கரடி பள்ளி வகுப்பறை கதவை உடைத்து, வகுப்புக்குள் நுழைந்துள்ளது. உணவு தேடி வந்த கரடி அங்க வைக்கப்பட்டிருந்த இரண்டு பீரோ, ஆசிரியர், மாணவர்கள் அமரும் இருக்கைகளை உடைத்து புத்தகங்களை கிழித்தும் வகுப்பறையை சூறையாடியது.



உணவு ஏதும் கிடைக்காததால் கரடி மீண்டும் அருகே உள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்று மறைந்தது. இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் அளித்த புகார் அடிப்படையில் பள்ளி வளாகத்தை சுற்றி கரடி நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து இந்தப் பள்ளியில் கரடி அட்டகாசம் செய்து வருவதால் கரடியை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...