குப்பேபாளையம் குடியிருப்பு பகுதியில் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பு - பத்திரமாக மீட்ட வனத்துறை

கோவை குப்பேபாளையம் குடியிருப்பு பகுதியில் 10 அடி நீளமுள்ள மலைபாம்பு ஒன்று புகுந்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த குப்பேபாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்றிரவு குப்பேபாளையம் குடியிருப்பு பகுதிக்குள் சுமார் 10 அடி நீளமுள்ள மலை பாம்பு புகுந்ததாக கூறப்படுகிறது.

இதனை கண்டுஅதிர்ச்சியடைந்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதனடிப்படையில் வனவர் கோபால் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். இதனை அடுத்து குடியிருப்பிற்குள் புகுந்த 10 அடி மலைப்பாம்பை சிறிது நேர தேடுதல் வேட்டைக்கு பின்னர் பத்திரமாக மீட்டனர்.



இதனை தொடர்ந்து மீட்கப்பட்ட10 அடி நீளமுள்ள மலைப் பாம்பை பத்திரமாக அடர் வனப்பகுதிக்குள் விடுவித்ததாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குடியிருப்பு பகுதியில் 10 அடி நீள மலைப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...