கோவை நல்லூர்வயல் அருகே சிறுத்தை தாக்கி பசு மாடு உயிரிழப்பு - விவசாயிகள் கோரிக்கை

கோவை தொண்டாமுத்தூர் நல்லூர்வயல் பகுதியில் தொடர்ச்சியாக கால்நடைகளை சிறுத்தை தாக்கிக் கொல்வதாகவும் உடனடியாக சிறுத்தை வருவதை தடுக்கும் பணியை வனத்துறையினர் விரைந்து எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட தொண்டாமுத்தூர் அருகே நல்லூர்வயல் பகுதியில் கடந்த சில தினங்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அந்த சிறுத்தையானது ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை தாக்கி கொன்று வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று நல்லூர்வயல் பெருமாள்கோவில்பதி பகுதியை சேர்ந்த சண்முக சுந்தரம் என்பவருக்கு சொந்தமான பசு மாடுகள் தோட்டத்தின் அருகே மேய்ச்சலுக்கு சென்றது. அப்போது மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடுகளில் ஒரு மாடு மட்டும் வீடு திரும்பாத நிலையில் அப்பகுதியில் சென்ற பார்த்த போது பாசு மாடு உடல் முழுவதும் காயத்துடன் இறந்து கிடந்ததுள்ளது.

இதையடுத்து சண்முக சுந்தரம் மதுக்கரை வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அங்கிருந்த கால் தடங்களை ஆய்வு செய்ததில் அது சிறுத்தையின் கால் தடம் என்பது தெரிந்துள்ளது.

மேலும் வனத்துறையினர் உயிரிழந்த பசு மாட்டிற்கு உடற்கூறு ஆய்வு செய்த கால்நடை மருத்துவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே தொடர்ந்து கடந்த 3 மாதங்களில் 5க்கும் மேற்பட்ட கால்நடைகளை சிறுத்தை தாக்கிக் கொன்றதாகவும், உடனடியாக சிறுத்தை வருவதை தடுக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...