உதகை அருகே நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 213 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

குந்தா தாலுக்காவிற்குட்பட்ட பாலக்கொலா கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் 213 பயனாளிகளுக்கு, 1.23 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் அம்ரித் வழங்கினார்.



நீலகிரி: உதகை அருகே உள்ள பாலக்கொலா கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. அதில் 6 நபர்களுக்கு 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான விபத்து நிவாரண உதவி தொகையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 28 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையான 1 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான ஆணையினை வழங்கினார்.



மேலும் 23 பயனாளிகளுக்கு 1.15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய குடும்ப அட்டைகள், தோட்டக்கலைத்துறை சார்பில் 12 பயனாளிகளுக்கு 1.60 லட்சம் ரூபாய் மதிப்பில் மானியத்துடன் கூடிய நுண்ணீர் தெளிப்பான் மற்றும் மின்சார பேட்டரி மூலம் இயங்கும் தெளிப்பான்கள் வழங்கப்பட்டன.



மேலும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 81 பயனாளிகளுக்கு 56.70 லட்சம் ரூபாய் மதிப்பில் வீட்டுமனை பட்டா, மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 10 பயனாளிகளுக்கு 37.72 லட்சம் ரூபாய் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டது.



மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான உதவித்தொகை, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 4 சுய உதவிக்குழுக்களுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பில் கடன் உதவிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு 18 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.



மேலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு அட்டைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 6 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் சீருடைகள் ஆகியவற்றை ஆட்சியர் அம்ரித் வழங்கினார்.



கூட்டுறவு வங்கி சார்பில் 25 பயனாளிகளுக்கு 17.55 லட்சம் ரூபாய் மதிப்பில் கடனுதவி, வேளாண் பொறியியல் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு தேயிலை பறிக்கும் இயந்திரங்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள் என மொத்தம் 213 பயனாளிகளுக்கு 1.23 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...