திருப்பூர் பல்லடம் அருகே 2 தனியார் பேருந்துகள் மோதி விபத்து - போக்குவரத்து பாதிப்பு.

செம்மிபாளையம் அருகே தனியார் பனியன் நிறுவன ஊழியர்கள் சென்ற பேருந்தின் மீது மற்றொரு தனியார் பேருந்து மோதிய விபத்தில், பனியன் நிறுவன பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பேர் சிறுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.



திருப்பூர்:திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த செம்மிபாளையம் அருகே தனியார் பனியன் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பனியன் நிறுவனத்தில் பணிபுரிவதற்காக பல்லடம் மற்றும் செம்மிபாளையம் பகுதியில் இருந்து பேருந்தின் மூலம் ஊழியர்களை அழைத்துச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் ஊழியர்களை அழைத்துச் செல்லும் பேருந்து பல்லடம் பகுதியில் பணியாட்களை ஏற்றிக் கொண்டு செம்மிபாளையம் சென்று அங்கிருந்த ஊழியர்கள் என 20க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு வந்தது.

பேருந்தை ஓட்டுனர் அபூர்வராஜ் என்பவர் இயக்கி வந்துள்ளார். அப்போது திருப்பூரில் இருந்து கோவை நோக்கி 60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்த தனியார் பேருந்து, பனியன் நிறுவன ஊழியர்கள் சென்ற பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், பனியன் நிறுவன ஊழியர்கள் சென்ற பேருந்து, சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதில் 20 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.



விபத்தினை பார்த்த அப்பகுதி மக்கள் பல்லடம் காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்து விட்டு பேருந்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பேருந்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தின் காரணமாக கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...