கோவையில் பழங்குடி பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்த மருத்துவர், உதவியாளருக்கு குவியும் பாராட்டு

காரமடை அடுத்த மொட்டியூர் பழங்குடி கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே குழந்தை பிறந்த நிலையில், பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் உதவியாளர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.



கோவை: கோவை மாவட்டம் காரமடை அடுத்த மொட்டியூர் பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மருதன். இவரது மனைவி சித்ரா (23). இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், இரண்டாவதாக கருவுற்றிருந்த சித்ராவிற்கு நேற்று இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து மழை பெய்து வந்ததாலும், சாலைகள் மோசமான நிலையில் இருந்ததாலும் 108 ஆம்புலன்ஸிக்கு தகவல் அளித்தனர்.

இந்நிலையில், விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சித்ராவை அழைத்துக் கொண்டு அரசு மருத்துமனையை நோக்கி புறப்பட்டுச் சென்றனர். அப்போது, சித்ரா உடல் நிலை மோசமடைய துவங்கியதாக தெரிகிறது.

இதன் காரணமாக சீலியூர் - தோலம்பதி சாலையில் நீலாம்பதி அருகே வந்த போது வலி அதிகமானதால் அவசர மருத்துவ உதவியாளர் பாலமுருகன், பைலட் அருண், அவசரகால மேலாளர் விக்னேஷ் ஆகியோர் சித்ராவிற்கு பிரசவம் பார்த்தனர்.



இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமுடன் உள்ளனர். இதையடுத்து இருவரையும் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.

கொட்டும் மழையில் பழங்குடி இன பெண்ணுக்கு உடனடியாக பிரசவம் பார்த்து காப்பாற்றிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...