நீலகிரி உதகையில் மழை சேதங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் நேரில் ஆய்வு

உதகையில் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் மழை சேதங்களை ஆய்வு செய்த ஆட்சியர் அம்ரித், மழைநீரை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



நீலகிரி: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக மலை மாவட்டமான நீலகிரியில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், குந்தா உள்ளிட்ட பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் கடும் குளிர் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

உதகை நகரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோடப்பமந்து கால்வாயில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த தண்ணீர் அருகிலுள்ள சாலைகளுக்கும் குடியிருப்புகளுக்கும் புகுந்து விடுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.



மேலும் உதகை பேருந்து நிலையத்திலிருந்து படகு இல்லம் செல்லும் சாலையில் மழை நீர் அதிகமாக தேங்குவதால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் அப்பகுதியில் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.



அப்போது உடனடியாக மணல் மூட்டைகளை அடுக்கி மழை நீர் சாலைக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...