கோவையில் கபடி போட்டியில் வென்றதால் தகராறு - இளைஞரை கொன்ற மூவருக்கு ஆயுள் தண்டனை..!

கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது, அம்மன் குளம் பகுதியில் நடைபெற்ற கபடி போட்டியில் ஏற்பட்ட தகராறில் நவீன் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் தொடர்புடைய மூன்று கொலையாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.3,500 அபராதமும் விதித்து நீதிபதி பாலு தீர்ப்பளித்தார்.


கோவை: கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த நவீன்குமார் (23). கபடி வீரரான இவர், கடந்த பொங்கல் விழாவை முன்னிட்டு அம்மன்குளம், நியூ ஹவுசிங் யூனிட்டில் கபடி போட்டி நடைபெற்றது.

போட்டியில் தனது அணியில் விளையாட, கோவை-திருச்சி ரோட்டில் உள்ள ஹைவேஸ் காலனியை சேர்ந்த லோகேஸ்வரன் என்பவரை நவீன் குமார் அழைத்து வந்து உள்ளார்.

நவீன் பங்கேற்ற அணி வெற்றி பெற்றதாக தெரிகிறது.

இதற்கு, அதே பகுதியை சேர்ந்தவிஜயகுமார் (21), கண்ணன் (21), ஹரிகரன் (21) ஆகிய 3 பேரும் அதிருப்தி தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வெளியூரை சேர்ந்த நபரை அழைத்து வந்து கபடி போட்டியில் வெற்றி பெற்றதாக கூறி நவீன் குமாரை தாக்கச் சென்றனர்.

பின்னர், அங்கிருந்தவர்கள் சமாதானப்படுத்த அவர்கள் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

அன்றைய தினம் இரவு, நவீன்குமார் அவரது நண்பர் லோகேஸ்வரனுடன்நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது விஜயகுமார், கண்ணன், ஹரிகரன் ஆகிய 3 பேரும் அவர்கள் இருவரையும் வழிமறித்து மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதில், ஆத்திரம் அடைந்த 3 பேரும் தாங்கள் மறைத்து வைத்து கத்தியை எடுத்து நவீன்குமாரின் வயிறு உள்பட பல்வேறு இடங்களில் குத்தி கொலைச் செய்தனர்.இதுகுறித்து, கோவை ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமார், கண்ணன், ஹரிகரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு கோவை குண்டு வெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பாலு, கபடி வீரர் நவீன்குமாரை கொலை செய்த 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.3,500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் கார்த்திகேயன் ஆஜராகி வாதாடினார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...